சாய் பல்லவி திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருந்த திரைப்படம் ‘கார்கி’. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

‘கார்கி’ படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கியிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி ‘கார்கி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Sai Pallavi, Gargi 04th of August 2022