‘குருதி ஆட்டம்’ இயக்குனர் ஸ்ரீகணேஷ் அஜித்துடன் இணைகிறாரா? மாஸ் தகவல்!

தல அஜித்துடன் கூட்டணி சேரும் அதர்வா பட இயக்குனர்!

அதர்வா நடிப்பில் உருவான ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தை ‘8 தோட்டாக்கள்’ புகழ், ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையிலும், பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith, Sri Ganesh, Kuruthi Aattam 04-July-2022

இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீகணேஷ் அஜித்துடன் இணைந்து ஓர் படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அந்த வேளை, டிவிட்டரில் ரசிகர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது, “நீங்கள் அஜித்தோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே… அது உண்மையா?” எனக் கேட்ட நிலையில், அதற்குப் பதிலளித்த இயக்குனர் ஸ்ரீகணேஷ் “நன்றி… அதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. சீக்கிரமே படம் பற்றிய தகவலை தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.