‘மாமனிதன்’ படத்திற்கு கிடைத்த விருது! இயக்குனர் வெளியிட்ட தகவல்

‘மாமனிதன்’ மேடம் விருது பெற்றமை குறித்து வெளியான செய்தி!

விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் 4வது படமாக உருவான திரைப்படம் மாமனிதன். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிவுற்றது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த நிலையில் அவரின் அப்பாவான இளையராஜா இருவரும் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

Maamanithan, Vijay Sethupathi 04-Aug-2022

இந்த படத்தின் தமிழகம் மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் கைப்பற்றி வெளியிட்ட நிலையில், இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மாமனிதன் படத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த படத்திற்கான ‘கோல்டன் வின்னர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி இதை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Maamanithan, Vijay Sethupathi 04-Aug-2022 001