கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் அதிரடியான டிரைலர் ரிலீஸ்! பட்டைய கிளப்பும் வசனங்கள்

வெளியான ‘விருமன்’ படத்தின் சூப்பர் ஆக்ஷன் டிரைலர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Karthi, Aditi Shankar, Viruman 04-Aug-2022

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 12 ஆம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சப் பூவு’ பாடல் ஹிட்டான நிலையில், நேற்று ‘மதுர வீரன்’ என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோவை யுவன் வெளியிட்டிருந்த நிலையில், இப்பாடல் தனக்குப் பிடித்தமானது என நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விருமன்’ படத்தின் டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான 1 மணி நேரத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.