சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்க போகும் வெற்றி பட இயக்குனர்?

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சந்தானம் மேயாத மான் ரத்தினகுமார் இயக்கத்தில் உருவான “குலு குலு” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் 2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “இந்தியா பாகிஸ்தான்” படத்தை இயக்கிய என்.ஆனந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இயக்குனர் கூறிய கதை நடிகர் சந்தானத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால் அப்படத்தில் நடிப்பதற்காக அவர் ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Santhanam, Anand 03rd of August 2022