விக்ராந்த் நடிப்பில் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை படம்!!

“தொட்டுவிடும் தூரம்” படத்தை இயக்கிய இயக்குனர் நாகேஸ்வரன் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. எஸ். அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் “டிக்கிலோனா” புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்து அதே சமயம் குடும்ப பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.

மாசாணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version