சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பழம்பெரும் பட நடிகை?

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா இணைந்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் நடித்த ’கீழ்வானம் சிவக்கும்’ கமல்ஹாசன் நடித்த ’மரோசரித்ரா’ ரஜினிகாந்த் நடித்த ’நெற்றிக்கண்’ உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக சரிதா நடித்துள்ளார் என்பதும் விஜய்யின் ’ப்ரெண்ட்ஸ்’ உள்பட இளைய தலைமுறை நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பரத் ஷங்கர் இசையில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Exit mobile version