ஜெயம் ரவியின் அடுத்த படம் என்ன? புதிய அப்டேட்!!!

ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 30வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் எம் ராஜேஷ் இயக்கிய இரண்டு படங்களில் ஏற்கனவே இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவர் தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நடித்த விடிவி கணேஷ் என்பதும் இன்னொரு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவில் தொடங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Priyanka Mohan, Ponniyin Selvan, Jayam Ravi, 03rd of August 2022