மற்றுமொரு விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதா? செம தகவல்

நடிகர் விக்ரமின் ரிலீசுக்கு தயாராகும் மற்றுமொரு படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல்!

விக்ரம் நடிப்பில் தற்போது, ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இந்நிலையில் பல வருடங்களாக ‘துருவ நட்சத்திரம்’ படம் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது.

Vikram, Udhayanidhi, Dhruva Natchathiram 03-Aug-2022 001

ஆகையால் சீயான் விக்ரம் தற்போது பல ஆண்டுகளாக இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆகையால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Vikram, Udhayanidhi, Dhruva Natchathiram 03-Aug-2022

இந்நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும் விக்ரம் இதுவரையிலான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்வதற்காக படக்குழு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மற்றொரு தகவலாக நெட்பிளிக்ஸை அணுகி படத்தை முடிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.