‘புஷ்பா 2’ படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகை! மேலும் ரசிகர்கள் உற்சாகத்தில்

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை குறித்த செய்தி!

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிக பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

Pushpa 2, Allu Arjun, Rashmika 03-Aug-2022

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என உருவாக்கவுள்ளது. அந்தவகையில் இப்படத்தின் கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல உருவாகிறது. புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயற்சிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறுவதாக இரண்டாம் பாகம் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல மற்றொரு முக்கிய வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pushpa 2, Allu Arjun, Rashmika 03-Aug-2022 001
adbanner