கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சிறப்பு போஸ்ட், புதிய அப்டேட்!!

தமிழ் சினிமாவிற்கு ‘பருத்திவீரன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்திக். தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பையா, சிறுத்தை, தோழா போன்று பல படங்களை நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “விரும்பன்”. இப்படத்தை ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கொம்பன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரான ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

Karthi, Viruman, 30th of July 2022

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படகுழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இப்படத்தில் காண ரிலீஸ் தேதி மாறுபட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு ஒரு சிறப்பு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது.

Karthi, Viruman, 30th of July 2022