தளபதி விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 67’ படம் குறித்த புதிய அப்டேட்!!!!

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தளபதி 67’ படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து விட்டேன் என்றும் 10 நாட்களாக திரைக்கதை எழுதி வருகிறேன் என்றும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பிலிருந்து கூறிய பின்னரே நான் மற்ற தகவல்களை கூற முடியும் என்றும் கூறினார்.

Vijay, Thalapathy 67, Logesh Kanagaraj 30th of July 2022