மோகன் ராஜா படத்தில் நடிக்கும் பிரபல விஜய் பட இயக்குனர்!

பிரபல முக்கிய புள்ளியும் நடிகருமான ஒருவர் மோகன் ராஜா படத்தில் இணைகிறார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மோகன்ராஜா. இவர் இயக்கத்தில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் வெளியானது. இதை அடுத்து, இயக்குனர் மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், ‘லூசிபர்’ படத்தின் ரீமேக்கான ‘காட் பாதர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

GodFather, PrabhuDeva, Mohan Raja 31-July-2022 001

இப்படத்தில் இந்தி நடிகர் சல்மான் கான் ஒரு கேமிரோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பதாக தகவல் ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில், இப்பட ஷூட்டிங்கில், மோகன் ராஜாவும், பிரபு தேவாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.