‘வணங்கான்’ படத்தின் டைட்டிலுக்கு வந்த சோதனை! இயக்குனர் ஒருவர் புகார்!

சூர்யா படத்தின் டைட்டிலில் ஏற்பட்ட பெரிய சிக்கல்!

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் ‘வணங்கான்’ படம் உருவாகி வருகிறது. கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

Vanangan, Suriya, Bala 31-July-2022

இந்நிலையில் ‘வணங்கான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. மேலும் தீபாவளியின் போது இந்த திரைப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில்ஏற்கனவே ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சரவணன், ஆரவ் நடிப்பில் ‘வணங்கான்’ என்ற பெயரை பதிவு செய்து ஷூட்டிங் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போது இது குறித்து அவர் புகார் தெரிவித்த நிலையில், அது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.