செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் குரல் கொடுத்த கமல்ஹாசன் – செம வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது இந்த தொடக்கவிழா போட்டிக்கு பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பார்வையாளராக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

Kamal, Viknesh Shivan 30-July-2022

நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பெருமைகளை எடுத்துக்கூறும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அந்த வீடியோவுக்கான வாய்ஸ் ஓவர் குரலை நடிகர் கமல்ஹாசன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த பின்னணிக் குரலுக்காக கமல்ஹாசன், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர் குழுவினரோடு கலந்துரையாடும் வீடியோவை தற்போது விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.