‘வாரிசு’ படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்த செய்தி!!

தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் குறித்து வியாபாரம் நடந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

Vijay, Rashmika Mandanna, Varisu 30-July-2022

இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலின்படி இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஒரு மிகப்பெரிய தொகைக்கு ‘வாரிசு’ தயாரிப்பாளரிடம் இருந்து சன் டிவியும் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் – ரஷ்மிகா மந்தனா நடிப்பில், வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிகளை சம்பாதித்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.