விஜய் பட நாயகியா விஜய் தேவரகொண்டாவின் காதலி?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிக மந்தனா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கீதா கோவிந்தம்’. இப்படத்தை தொடர்ந்து, ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், இருவரும் அதை மறுத்திருந்தனர்.

இந்நிலையில், கரண் ஜோகரின் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டாவும், நடிகை அனன்யா பாண்டே இருவரும் கலந்துகொண்டனர். அப்போது, விஜய் தேவரகொண்டா குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் அனன்யா பாண்டே கூறியபோது, அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் இருப்பதுபோன்று தெரிவித்தார்.
இது குறித்து விஜய்தேவரகொண்டா கூறியபோது, ராஷ்மிகா எனக்கு ஒரு நல்ல தோழி என்றும் அவரை எனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். விஜய்தேவரகொண்டா இப்படி மழுப்பலாக பதிலளித்தது , ராஷ்மிகாவுக்கும் அவருக்கும் உண்மையிலேயே காதல் உள்ளதா என ரசிகர்கர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகின்றது.

தற்போது ராஷ்மிகா ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.