சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் வெளியான முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் – மரியா ர்யபாஷாப்க, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Sivakarthikeyan, Prince 29-July-2022

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவால் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் படமாக்கப்பட்டதும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.