தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் வெளியான அதிரடியான டீசர்!

தனுஷ் மிரட்டும் ‘வாத்தி’ பட டீஸர் வெளியாகி இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கும் படங்களில் ஒன்றான ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Dhanush, Vaathi 29-July-2022

இந்த படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் கல்விக்கான பிரச்சினைகள் குறித்து எழும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று இந்த டீசரில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் இந்த படத்தில் ஆசிரியராக கலக்கி உள்ளார் என்பதும் அதேபோல் ஆக்ஷனிலும் அதிரடி காட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush, Vaathi 29-July-2022 01

தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ளார் என்பதும்
ஜி.வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.