கொடுத்த சந்தர்ப்பத்தை காப்பாற்ற தவறிய சிவகார்த்திகேயன் – அடுத்தடுத்த படங்கள் ரிலீஸில் சிக்கலா?

சிவகார்த்திகேயன் தன் வாயால் கெட்ட கதையாக சிக்கலில் மாட்டிக் கொண்டார்!

தற்போது தமிழ் சினிமாவில் பெரிதும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

Sivakarthikeyan 28-July-2022

சமீபத்தில் ‘டான்’ படத்தை ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அவர் அடுத்து ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மற்றும் ‘பிரின்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ஏற்கனவே வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால் பல கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பாளியானார். அந்த தொகையை அவர் நான்கு தவணையாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவணையை மட்டுமே சிவகார்த்திகேயன் கொடுத்ததாகவும், அடுத்தடுத்த தவணைகளை கொடுக்க தவறியதால் பணம் கொடுத்தவர்கள் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸின் போது இது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் நேரத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.