நிர்வாண புகைப்பட விவகாரம் தொடர்பாக ரன்வீருக்கு ஆதரவு வழங்கும் பிரபல நடிகை!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் சில ஆண்டுகளுக்கு முன் நடிகையான தீபிகா படுகோனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில், இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த நிர்வாண போஸ் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இது இருக்க தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் இதைப் பாராட்டினாலும், ரண்வீரின் நிர்வாணா போஸுக்கு தொடர்ந்து பலர் மத்தியில் எதிர்ப்புகளும் விமர்சனமும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இதற்க்கு பாலிவுட் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் ரண்வீர் சிங்குக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தாலும், சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போலீஸில் புகார் லொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ரண்வீர் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தி சினிமாவின் பிரபல முன்னணி நடிகையும், ரண்பீர் கபூரின் மனைவியுமான ஆலியாபட் தற்போது ரண்வீர் சிங்கிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.