வெற்றி இயக்குனரின் படத்தில் நடிக்க போட்டி போடும் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியின் நடிப்பில் அண்மையில் வெளியான “கார்கி” படத்தை இயக்கியவர் புது இயக்குனரான கௌதம் ராமச்சந்திரன். இந்த திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தை சூர்யா – ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2d நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியானது.

இந்த வகையில் இயக்குனரின் படைப்பாற்றல் மிகவும் பிடித்துப் போனதால் நடிகர் சூர்யா தனது 2d நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க வேண்டுமென்று அவரிடம் கேட்டுள்ளாராம். மேலும் அது குறித்த ஒப்பந்தமும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் அந்த இயக்குனருக்கு போன் போட்டு கார்கி திரைப்படத்தைப் பற்றி பாராட்டி பேசி தனக்கும் கதை இருந்தால் கூறும் படி கேட்டுள்ளாராம்.

மேலும் புது இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் தனது முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களான சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே போட்டி போட வைத்திருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி இந்த தகவல் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

suriya, Sivakarthikeyan, 26th of July 2022
adbanner