விஜய்யின் அடுத்த புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரியங்கா மோகன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற படங்களிலும், முன்னணி நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இயக்குனர் நெல்சன் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், வெளிநாட்டு சுற்று பயணத்தில் இருக்கும் பிரியங்கா மோகன், இந்தியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘தளபதி 67’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.