தனுஷ் படத்தின் செம அப்டேட் கொடுத்த படக்குழு!
தனுஷ் தற்போது நடித்து வரும் ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘வாத்தி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படம் ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை 27ஆம் தேதியும் டீசர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
