இணையதளங்களில் வைரலாகி வரும் கலைப்புலி தாணு வெளியிட்ட மாஸ் வீடியோ!!!!!

கலைபுலி எஸ் தாணு அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கான பயிற்சி படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த படப்பிடிப்பில் சூர்யா மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்பட்டவுடன் வெளிவரும் காளைக்காக காத்திருப்பது, ஆக்ரோஷமாக முட்டவரும் காளையை சூர்யா எதிர்கொள்வது போன்ற காட்சிகள் உள்ளன.

அந்த வகையில் இன்று சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வாடிவாசல்’ படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்த சூர்யாவின் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya, Vaadivaasal, kalaipuli thanu, 23th of July 2022

அமேலும் சூர்யா இந்த காட்சிகளில் தத்ரூபமாக நடித்துள்ள வீடியோவை பார்க்கும் போது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவின் தனித்துவமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய விருது பெற்ற சூர்யா, ஜீவி பிரகாஷ் ஆகியோர்களுக்கு மேலும் தேசிய விருதுகளை பெற்றுத்தரும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.