வெளியானது கார்த்தியின் ‘விருமன்’ ரிலீஸ் குறித்த தகவல்

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

Karthi, Viruman,Aditi Shankar, 23th of July 2022

இதனை அடுத்து ‘விருமன்’ திரைப்படம் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் கார்த்தி ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் இந்த படத்தை இந்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi, Viruman,Aditi Shankar, 23th of July 2022