உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை கடந்த சில மாதங்களாக ரிலீஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட பல படங்களை ரிலீஸ் செய்தது. மேலும் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா நடித்த ’பொய்க்கால் குதிரை’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை தான் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
