சிம்புவுக்காக ‘மஹா’ படம் பார்க்க சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!

‘மஹா’ படம் பார்த்து தெறித்தோடிய சிம்பு ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகாவின் 50 ஆவது படமான ‘மஹா’ நேற்று ரிலீஸ் ஆன நிலையில், இந்த படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

Simbu, Hansika, Maha 23-July-2022

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவரது படங்கள் பெரியளவில் பேசப்படாத நிலையில், ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ‘மஹா’ திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ‘மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் ரிலீஸாகும் படமாக ‘மஹா’ அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று படம் வெளியாகிய முதல் நாளே மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மற்றும் சிம்பு ரசிகர்கள் அவருக்காக படம் பார்க்க வந்து ஏமாந்து போனதாக சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மோசமான திரைக்கதை காரணமாக படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

adbanner