சென்னை திரும்பிய தல அஜித்! ரசிகர்கள் உற்சாகம்

‘ஏகே 61’ படத்தின் அஜித் குறித்த காட்சிகள் ஆரம்பிக்கப்படுகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar, AK 61 23-July-2022

வலிமை படத்தில், தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவை வில்லனாக அறிமுகம் செய்து வைத்த படக்குழு, ‘ஏகே 61’ படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகர் அஜய்யை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து அஜித்குமார் செனை திரும்பியுள்ளார். நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இனிமேல் ‘ஏகே 61’ பட ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.