5 தேசிய விருதுகளை அள்ளி குவித்த சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் முழு விபரங்கள்!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கார இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அபர்ணா பால முரளி நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைத்திருந்தார். பல்வேறு விருதுகளை வாரி குவித்த இந்த திரைப்படம் தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா என்று உள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கு கிடைக்க சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரை போற்று படத்துக்கு கிடைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்றும் படத்திற்காக ஜி வி பிரகாஷுக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதைக்கான விருதும் சூரரை போற்று திரைப்படம் வென்றுள்ளது.

suriya,soorarai Pottru, 22nd of July 2022
adbanner