அமெரிக்காவில் இருந்து திரும்பிய டி ஆர் – சிம்பு திருமணம் குறித்து அளித்த பதில்!

சிம்பு திருமணம் குறித்து பேசிய டி ராஜேந்தர்!

தமிழ் சினிமாவின் பல்வகை திறமை கொண்ட கலைஞராக இருப்பவர் டி ராஜேந்தர். இவர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

T Rajendar, Simbu 22-July-2022

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதிபடுத்தும் வகையில் தற்போது டி ராஜேந்தர், அவரது மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது நலமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிம்புவின் திருமணம் எப்போது என்று கேள்வி எழும்பிய போது “திருமணம் என்பது இருமனம் சேர்வது. கடவுள் எழுதியதுதான் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.