இணையத்தில் வைரலாகும் யோகி பாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டர்::::

பா ரஞ்சித்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் சியான் விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார் என்பதும் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்ப விழா சமீபத்தில் நடந்தது என்பதையும் பார்த்தோம். ஜிவி பிரகாஷ் இசையில் கிஷோர் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

PA Ranjith, Yogi Babu, Pommai Nayagi, 22nd of July 2022

இந்த நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ’பொம்மை நாயகி’ படம் என்பது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தனது மகளுக்காக ஒரு தந்தையின் போராட்டமே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. யோகிபாபு ஒரு சிறு பெண் குழந்தையுடன் இருக்கும் இந்த போஸ்டர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படம் தேனி உள்பட மலை கிராமங்களில் இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

bommai nayagi
bommai nayagi