அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்திலும் மீண்டும் பைக்கர்களா????

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த நிலையில் புனே படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாகவும் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற உள்ளது என்றும் புனேவில் லொகேஷன் பார்க்கும் பணி முடிவடைந்தது என்றும் கூறப்பட்டது.

மேலும் ’ஏகே 61’ படத்திலும் பைக்கர்களின் சேசிங் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிய ‘வலிமை’ திரைப்படத்தில் பைக்கர்கள் காட்சிகள் இடம்பெற்றது என்பதும் இந்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’ஏகே 61’ படத்திலும் பைக்கர்கள் காட்சி இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அல்லது டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith, AK 61, Valimai, Vignesh Shivan, 21st of July 2022