திருமணம் குறித்து நித்யா மேனன் கொடுத்த பதில்! வைரல் செய்தி

திருமணம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி வருகின்றன.

Nithya Menen 21-July-2022

அந்த வகையில் சில தினங்களாக அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன.

ஆனால் அதை மறுத்து, அதற்கு விளக்கமளித்துள்ள நித்யா மேனன் “இப்பொழுது எனது முழு கவனமும் வேலையில்தான் உள்ளது. ஊடகங்கள் இது போன்ற தகவல்களை வெளியிடும் முன்னர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

adbanner