அற்புதமான குரலில் பாடி ரயிலில் பணம் பெறும் பெண்மணி – தேடும் இசையமைப்பாளர் இமான்! வீடியோ வைரல்

அருமையாக பாடி இசையமைப்பாளர் இமானை கவர்ந்த பெண்!

இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் இடம்பெற்ற ரயிலில் பாடி பணம் பெறும் பெண் ஒருவர் குறித்து விவரங்களை இசையமைப்பாளர் டி. இமான் கேட்டுள்ளார்.

D. Imman 21-July-2022

சில தினங்களுக்கு முன்னர் ரயிலில் பாடி பணம் பெறும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ‘ஜீன்ஸ்’ படத்தில் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலை அந்த பெண் பாடியிருந்தார். அந்த பாடலை அவர் அருமையாக பாடிய விதத்தால் அங்குள்ள அனைவரையும் ஈர்த்தார்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் டி. இமான் ‘இந்த பெண் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோல வைரலான பாடகர் திருமூர்த்தியை இமான் தன் இசையில் சில பாடல்கள் பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

adbanner