நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வைரலாகும் தகவல்

ஐஸ்வர்யா ராய் குறித்து எழுந்துள்ள பரபரப்பு செய்தி!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் இந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் பிறந்தார்.

Aishwarya Rai 20-July-2022

தற்போது ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று கதையை தழுவும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மற்றும் இப்படத்தின் ஆடியோ விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்ளவில்லை என்பதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.