‘கேஜிஎப்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள்!
‘கேஜிஎப்’ படங்களின் பிரமாண்டமான வெற்றிகளுக்கு பின் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆல் இந்தியாவால் அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சுதா கொங்கரா தற்போது இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கை உருவாக்கி வருகிறார்.
மேலும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படும் நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது சிம்புதான் என்று நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.