தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் அடுத்த திரைப்படம் ’பப்ளி பவுன்சர்’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்புக்கு பின்னர் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வந்தாலும் ஒருசில முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கரீனா கபூர் நடித்த ‘ஹீரோயின்’, உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். தனிஷ் – கரண் மல்கோத்ரா இசையில் உருவாகிய இந்த படம் தமன்னாவின் வெற்றி படமாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கபடுகிறது.
