‘கோப்ரா’ படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட தாமதம் குறித்து செய்தி!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. அதன் பின் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அத்துடன் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக சினிமாவட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.