லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சல்மான் கான் படம்! வைரலாகும் தகவல்!

சல்மான் கான் – லோகேஷ் கூட்டணியின் படம் குறித்த தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து இயக்க உள்ளஉள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் பங்களிப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Salman Khan, Lokesh Kanagaraj 20-July-2022

இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை இயக்குனர் லோகேஷ் அவரது குழுவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த ‘தளபதி 67’ படப்பிடிப்பு டிசம்பருக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2, அல்லது இரும்புக்கை மாயாவி,மற்றும் ரஜினி படம் ஆகியவற்றில் ஒன்றை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

adbanner