விஷாலின் அதிரடியாக வெளியான ‘லத்தி’ டீசர் ரிலீஸ்!

விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தின் டீஸர் இணையத்தில் வைரல்!

விஷால் நடிப்பில் ‘லத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vishal, Sunaina, Laththi 20-July-2022

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக உள்ள இந்த டீசரில் விஷால் காக்கி சட்டையுடன் கம்பீரமான தோற்றத்தில் அட்டகாசமான காட்சிகள் உள்ளன.

டீஸர் ஆரம்பிக்க முன்னர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், விக்ரம், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் காக்கிச் சட்டையுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வினோத் குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

adbanner