அறிமுகப் படுத்தியவருக்கே ஆப்படித்த நடிகர்! மனம் நொந்த இயக்குனர்

வளர்த்த கடா மார்பில் பாஞ்சது போல் இயக்குனருக்கு செய்த நடிகர்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சிவகார்த்திகேயன் கலகலப்பாக தொகுத்து வழங்கியிருந்தார். அதைப் பார்த்த பாண்டிராஜ், அவருக்கு ‘மெரினா’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அந்த படத்துக்குப் பின்பு மீண்டும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

Sivakarthikeyan, Pandiraj 20-July-2022

அதை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் கேரியரில் திடீர் மாற்றமாக, சினிமாவில் அவரின் வளர்ச்சி அமோகமாக சென்றதும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் மீண்டும் ஒரு கதையோடு சிவகார்த்திகேயனை நாட, இப்போது, தான் பிஸியாக இருப்பதாக சொல்லி பாண்டிராஜை காய்வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் மனவருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.