இணையதளங்களில் வைரலாகும் ‘மாட்னா காலி, மாட்றவர் ஜாலி’ வீடியோ பாடல்

சந்தானம் நடித்துள்ள ‘குலுகுலு’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.


இயக்குனர் ரத்னகுமார் எழுதிய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ‘மாட்னா காலி, மாட்றவர் ஜாலி’ என்ற பாடல் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த பாடலுக்கு சந்தானம் மற்றும் சந்தோஷ் நாராயணன் தோன்றும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்று வைரலாகி உள்ளது.


மேலும் சந்தானம், அதுல்யா ரவி, நமிதா, மரியம் ஜார்ஜ், மகாநதி சங்கர், உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Santhanam, gulugulu, 19th July 2022