தொடர்ச்சியாக புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்! ஓஹோ இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயன் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதன் திட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடித்துவருகிறார். அதுமட்டும் அல்லாது ஆரம்பத்தில் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன் படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், தற்போது அறிமுக இயக்குனர் அல்லது இரண்டாம் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

Sivakarthikeyan, Prince, Maaveeran 19-July-2022

சமீபத்தில் ‘டான்’ படத்தை ரிலீஸ் செய்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் இயக்குனர்களும் ரசிகர்களுக்கு பெரிதும் தெரிந்த இயக்குனர்கள் இல்லை. இதையடுத்து தற்போது ‘மண்டேலா’ புகழ் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படமான ‘மாவீரன்’ படத்தில் நடித்துவருகிறார்.

இவ்வாறு தொடர்ச்சியாக இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவரே தயாரிக்கிறார். இதனால் புதுமுக இயக்குனர்களை வைத்து எடுத்தால் கணிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.