பாலா படத்துக்கு இணை இயக்குனராகும் ஏ எல் விஜய்! ஆச்சரிய தகவல்

பல வெற்றி படங்களை இயக்கிய ஏ எல் விஜய் இணை இயக்குனராக பாலாவுடன் கூட்டு!

இயக்குனர் பாலா கடைசியாக ‘நாச்சியார்’ படத்தை இயக்கியிருந்தார். அதன் பின் துருவ் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைகைவிட்டார். அதன் பிறகு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

A L Vijay, Bala, Suriya, Vanangaan 19-July-2022

இதையடுத்து இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் ‘வணங்கான்’ படதுக்கு ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இழுபறியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யா பாலா தரப்பை இணக்கமாக செய்யும் வகையில் இயக்குனர் ஏ.எல் விஜய் இணை இயக்குனராக இந்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. பல வெற்றி படங்களை இயக்கினாலும் எந்த ஒரு தாழ்வு மனப்பாங்கும் பார்க்காமல் ஏ.எல் விஜய் இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.