‘பொன்னியின் செல்வன்’ படக்குழு வீடியோ வைரல்!
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் உருவாகிய இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும், ஏற்கனவே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சோழர்களின் காலம்தான் தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் வரலாற்றாரிசியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், போன்றோர் சோழர்கள் பற்றிய பெருமையளைக் கூறும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது பலர் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.