திரையரங்குகளில் ரிலீஸாகும் ‘சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ !!!!

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை பாடியில் உள்ள முக்கிய திரையரங்கில் ’சூரரைப்போற்’று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் இதற்கான டிக்கெட் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடியில் இந்த படங்களை பார்த்த சூர்யா ரசிகர்கள் பெரிய திரையில் இந்த படத்தை பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

soorarai pottru, Jaibhim, Suriya 18th of july 2022
adbanner