விஜய் சேதுபதி படத்திற்கு தலைப்பாக பிரபல இசையமைப்பாளரின் பெயர்!

விஜய் சேதுபதி படத்தின் மாஸான அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi, DSP, Ponram 18-July-2022

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய புள்ளிகளின் படங்களை வரிசையாக ரிலீஸ் செய்துவரும் ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு DSP என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தை சினிமா ரசிகர்கள் DSP என அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner