ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படத்தில் இருந்து விலகிய சிம்பு! ஹீரோவை தேடும் தயாரிப்பாளர்

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தை கைவிட்ட சிம்பு!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க ஒப்பந்தமானார். அதில் முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் அறிவிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக ‘கொரோனா குமார்’ என்ற படம் உருவாக்க இருக்கிறது. இப்படத்தை ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.

Simbu, Corona Kumar 18-July-2022

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலும், மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக தயாரிப்பாளர் வேறு ஒரு ஹீரோவை வைத்து இந்த படத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.