சூர்யாவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபல நடிகை!
சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதற்கு சமீபத்தில் ‘வணங்கான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில், தற்போது சிறுத்தை சிவா படத்தில் சூர்யா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த படத்தை தற்போது தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு தகவலாக தில் ராஜு பைனான்ஸ் மட்டுமே செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான மஹிரா ஷர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 13-ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.